வேலைவாய்ப்பு பதிவுக்கான இணையதளம் தொடக்கம்
சென்னை, செப். 15: ஆன்லைனில் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்யும் நடைமுறையை துணை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்தது. தற்போது வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தல், புதுப்பித்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும்.இதற்காக வேலைவாய்ப்புத்துறை தனி இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இந்த இணைய தளத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் த.மோ. அன்பரசன் தலைமை வகித்தார்.ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும். இதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. பதிவில் மாறுபாடு ஏதேனும் இருப்பின் அதனை உரிய சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பகத்தை நேரில் அணுகி சரிபார்த்துக் கொள்ளலாம்.புதிதாக பதிவு செய்து கொள்ள விரும்புவோர் தங்களது கல்வித் தகுதி, பிறப்பு, ஜாதிச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்இணையதள முகவரி: www.tnvelaivaaippu.gov.inஆன்லைனில் பதிவு செய்யும் முறை1 ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி ?இணையதளத்திலுள்ள படிவத்தில் விவரங்களை நிரப்பி சான்றிதழ்களை ஸ்கேன் செய்து படிவத்தில் விண்ணப்பித்தவுடன் ஒரு தற்காலிக பயனாளி அடையாளம் மற்றும் ஏற்புச்சொல் வரும். தங்கள் விண்ணப்பத்தின் விவரங்கள் சரியானவை எனில் 7 நாட்களுக்குள் விண்ணப்பம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கப்படும். பதிவு அடையாள அட்டையே தாங்களே உருவாக்கி, தாங்களே அச்சிட்டு வெளியே எடுத்துக் கொள்ளலாம்.2 கூடுதல் பதிவு செய்வது எப்படி ?ஆன்லைன் கூடுதல் தகுதிகள் பகுதியை கிளிக் செய்ய வேண்டும். தங்கள் கோரிக்கையை வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்றபின் புதிய அடையாள அட்டையை எடுக்கலாம்.3 ஆன்லைனில் புதுப்பிக்க இயலுமா?ஆம். ஆன்லைனில் புதுப்பிக்கலாம். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பதிவான மாதத்திலும் தொடர்ந்து வரும் இரு மாதங்களுக்குள்ளும் புதுப்பிக்கலாம். வரையறுக்கப்பட்டுள்ள காலத்தே புதுப்பிக்காதவர்கள் 18 மாதச் சலுகையில் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்.4 விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, மறுக்கப்பட்டதா? என்பதை எப்படி அறிவது?தற்காலிகப் பதிவு எண்ணை "பயன்படுத்துவோர் அடையாளமாகவும்" (username), பிறந்த தேதியை, எற்புச் சொல்லாகவும்(password) பயன்படுத்தி, பதிவின் நிலையை அறியலாம்5 ஆன்லைனில் முகவரி மாற்ற முடியுமா?ஆம். பதிவு செய்தவர்கள் தாங்களே முகவரியை மாற்றிக் கொள்ளலாம்6 ஆன்லைனில் முன்னுரிமைச் சான்றினை(priority certificate) பதிய இயலுமா?முன்னுரிமைச் சான்றுகள், எடுத்துக்காட்டாக, நில எடுப்பு பாதிப்புச்சான்று (land acquisition) போன்றவற்றில் மெய்த்தன்மை உறுதி செய்யப்படவேண்டும். எனவே, எவ்வகை முன்னுரிமைச் சான்றுகளையும் ஆன்லைனில் பதிய இயலாது. சான்றின் நகல்களை விண்ணப்பத்துடன் அஞ்சலில்/நேரில் வேலைவாய்ப்பகத்திற்கு அனுப்ப வேண்டும்.7. இத்தளத்தில் பதிவு செய்ய தகுதியானவர் யார்?இத்தளத்தில் தமிழ்நாட்டில் வசித்து வருபவர் பதியலாம்.8. இத்தளம் மூலம் பணி நாடுவோர்களுக்கு உள்ள வசதிகள் யாவை?நேரில் பதிவு, நேரில் பதிவு புதுப்பித்தல், தகுதிகள் அதிகப்படுத்தல், அனுப்பப்பட்ட பதிவுக்கான பதிவட்டை எடுத்தல், வேலைவாய்ப்பு விவரங்கள், பல்வேறு தகுதிகளுக்கான பரிந்துரை வரம்புகள் அளித்தல் ஆகியவை உள்ளன.
நன்றி : தினமணி
Source: http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Latest%20News&artid=303619&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
வேலைவாய்ப்பு தேடுவோர் 70 லட்சம் பேர்
சென்னை, செப். 14: தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளோர் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவாக 70 லட்சத்தை தாண்டியுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 36 வேலைவாய்ப்பு அலுவலகங்களையும் மின் ஆளுமை (இ-கவர்னன்ஸ்) திட்டத்தின் கீழ் | 5.02 கோடியில் ஒருங்கிணைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதையடுத்து ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் புதிய முறை புதன்கிழமை முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.
முன்னதாக இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் கடந்த 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை மாநிலம் முழுவதும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு மற்றும் புதுப்பித்தல் தொடர்பான அனைத்துப் பணிகளும் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
கடந்த 31.12.2009 நிலவரப்படி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை 62 லட்சமாக இருந்தது. இதில் பெண்கள் 28.43 லட்சம் பேர்.
84 ஆயிரம் பேருக்கு மட்டுமே பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
எனினும், யானைப் பசிக்கு சோளப் பொரி என்ற கதையாக தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் விரிவுரையாளர் முதல் மருத்துவமனை ஊழியர் வரை 57 வகையான பணியிடங்களில் கடந்த 13.5.2006 முதல் 2009 வரை 84,407 பேர் பணி நியமனம் பெற்றுள்ளனர்.
எப்போதுமே, எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. ஆனால், மருத்துவப் படிப்புகளில் (அலோபதி முதல் அக்குபஞ்சர் மருத்துவர் வரை) பட்டம் பெற்ற 21,459 பேர் வேலைவாய்புக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
ஆசிரியர்கள்: இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்த 1.20 லட்சம் பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 2.21 லட்சம் பேரும், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 1.45 லட்சம் பேரும், எம்.எட். பட்டம் பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் 23 ஆயிரம் பேரும் வேலைவாய்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.
மின் ஆளுமை மயமாக்கும் பணி:
இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் (உயிர் பதிவேட்டு) விவரங்களை கணினி மூலம் இணையதளத்தில் ஏற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன.
இதன்மூலம், பதிவேட்டு விவரங்களின்படி, தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு அதிகரித்திருப்பது தெரியவந்தது.
கடந்த 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்குப் பின்னர் சுமார் 7.50 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனர்.
வேலைவாய்ப்புப் பதிவுக்கான ஏராளமான விண்ணப்பங்கள் அந்தந்தப் பள்ளிக் கூடங்களில் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டு, ஆசிரியர்கள் உதவியுடன் விவரங்களைப் பதிவு செய்யும் புதிய திட்டம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
பதிவு செய்யத் தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு:
இதுதவிர, கடந்த 2006, 2007, 2008 மற்றும் 2009 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் புதுப்பிக்க வாய்ப்பு அளிக்கும் வகையில், சிறப்புச் சலுகையை அரசு அறிவித்துள்ளது. இதன்படி, தகுதியுள்ளவர்கள் வரும் அக்டோபர் 4-ம் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலகஙகளில் பதிவு செய்யலாம். இதற்கான படிவத்தை நிரப்பி, வேலைவாய்ப்புப் பதிவு அட்டை நகலுடன் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலம் மனு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யத் தவறியவர்களில் 1.50 லட்சம் பேர் இந்தச் சிறப்பு சலுகையின் மூலம் பதிவு செய்துள்ளனர்.
இதனால், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள, வேலைதேடும் படித்த இளைஞர்கள் மற்றும் பெண்களின் எண்ணிக்கை 70 லட்சமாக அதிகரித்துள்ளது.
நன்றி: தினமணி
Source: http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Tamilnadu&artid=303327&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%2070%20%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D

Subscribe to:
Posts (Atom)