Search Engine Submission - AddMe

2006 முதல் 2009 -ம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை

திருச்சி, ஜூலை 9: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 2006 முதல் 2009 ஆம் ஆண்டு வரை பதிவைப் புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது.    இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) வ. தட்சிணாமூர்த்தி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:         2006, ஜனவரி 1 முதல் 2009, டிசம்பர் 31 ஆம் தேதி வரை பல்வேறு காரணங்களால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது பதிவை புதுப்பிக்கத் தவறியவர்கள் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.      இந்தச் சிறப்புச் சலுகையைப் பெற விரும்புபவர்கள் அவரவர் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது  பதிவஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும் போது தவறாமல் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டையின் நகலுடன் விண்ணப்பிக்க வேண்டும்.     2006 முதல் 2009 ஆம் ஆண்டு வரை பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.  இந்தச் சலுகை ஜூலை 5 முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும். அதன் பின்னர் பெறப்படும் மனுக்கள் ஏற்கப்படாது.      2006 ஆம் ஆண்டுக்கு முன்னர், அதாவது  2005, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் புதுப்பிக்கத் தவறியவர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. ஏற்கெனவே இதுபோன்ற புதுப்பித்தல் சலுகை பெற்றிருந்து மீண்டும் புதுப்பிக்கத் தவறியிருந்தால், இந்த அரசாணையின் கீழ் சலுகையைப் பெற மீண்டும் விண்ணப்பிக்கலாம்.    2006, 07, 08 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறி புதிதாகப் பதிவு செய்திருந்தாலும், இந்தச் சலுகையின்படி விண்ணப்பித்து பழைய பதிவு மூப்பை பெற்றுக் கொள்ளலாம் என்றார் அவர். 

நன்றி:தினமணி 
source:

1 comment:

  1. Hi, I am from Coimbatore. I have failed to renew my employment card because I lost it during house shifting and I found it only now. As soon as I found it, I checked with the website and it says that a period of 18 months are granted after the date fixed for renewal. I have lost the 18 months too. I am worried. Will there be any special renewal schemes in the coming months or should I apply afresh. I thank you for your reply. Please mail me to stuartso.little@gmail.com

    ReplyDelete